செய்திகள்

உலகச் செய்திகள்தொழுகை நடத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு:


இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மெக்காவில் தொழுகை நடத்துபவர்களின் எண்ணிக்கையை சவூதி அரசு அதிகரித்துள்ளது.


--------------------------------


சர்வதேச நிதிக்கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவிப்பு:


பாகிஸ்தான் ஆறு நிபந்தனைகளையும் நிறைவேற்ற தவறிவிட்டதாக பிரான்ஸ் நாட்டில் இயங்கும் குயுவுகு என்ற சர்வதேச நிதிக்கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.


-----------------------------------


அபராத கட்டணம் வசூலிக்கப்படும்:


நீண்ட இடைவெளிக்கு பின்னர் அரசு தரப்பில் தாமதமாக மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டால் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்கான அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


------------------------------


நேரடி விமான சேவை:


கோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது.


------------------------------


நூற்றாண்டு பட்டமளிப்பு விழா:


மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்து கொள்கிறார்.


-----------------------------
மாநிலச் செய்திகள்  மத்திய அரசு முடிவு:


வனத்துறையை சேர்ந்த 5 தன்னாட்சி நிறுவனங்களுக்கு நிதியளிப்பதை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


---------------------------------


8 சிறப்பு ரயில்கள் இயக்கம்:


பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக மேலும் 8 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.


------------------------------------


ஏழு மாதங்களுக்கு பிறகு:


மும்பையில் ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.


------------------------------------


வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு:


வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.