2வது முறையாக பிரதமரானர் ஜசிந்தாஆர்டென்

 நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.


நியூசிலாந்து பொதுத்தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி பெற்றுள்ளார்.


நியூசிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான பிரதமர் ஜசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 % வாக்குகளைப் பெற்றது.


நாடளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை கைப்பற்றிய தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.


பொதுத்தேர்தலில் வெற்றி குறித்து பிரதமர் ஜசிந்தா கூறுகையில் அடுத்த 3ஆண்டுகள் நிறைய பணிகள் உள்ளது.கொரோனா நெருக்கடியிலிருந்து நாட்டைச் சிறப்பாகக் கட்டமைக்க வேண்டும் என்றும் கூறினார்.


உலக தலைவர்கள் பலரும் பிரதமர் ஜசிந்தாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.