செய்திகள்

 உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.90 லட்சத்தை தாண்டியது.


பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,90,156 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.


உலகம் முழுவதும் கொரோனாவால் 38,345,908 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 28,835,226 பேர் குணமடைந்துள்ளனர்.


மேலும் 69,812 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


-----------------------------------------------


அண்ணா பல்கலை., உறுப்புக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரி முன் திமுக இளைஞரணி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்யவேண்டும் எனக்கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.


----------------------------------------


நாகை சின்னமேடு, கூழையாறு கிராமங்களில் மீன் இறங்குதளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ரூ.19.46 கோடியில் கடல் அரிப்பு தடுப்புப் பணி மற்றும் கொடியம்பாளையத்தில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்று கூறிய அவர், மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம் கட்டப்படுவதால் கிராம மீனவர்கள் பயனடைவர் என்றும் அவர் கூறினார்.


------------------------------------------------


 


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவி, புலி அருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.