பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்-சித்திர சபை பகுதி 1

திருக்குற்றாலம் – சித்திர சபை – ம  பகுதி (1)பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்.


1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – ய


ஐம்பெரும் அம்பலங்கள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்பது சிவன் நடனக் கோலத்தில் நடராசராகஎழுந்தருளியுள்ள சிவத்தலங்களுள் முக்கியமான ஐந்து தலங்களாகும்.


இத்தலங்களில் சிவனின் நடனம் நடைபெற்றதாக இந்து சமயப் புராணங்கள் கூறுகின்றன.


குற்றால மகிமை:  குற்றாலநாதர் கோயிலின் சித்திர சபை


சிவ தலங்களுள் பஞ்சசபைகளில் இது சித்திரசபை எனப்படும்.


குற்றாலநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தென்காசி மாவட்டம் , குற்றாலத்தில் அமைந்துள்ளது. இத்தலம்சிவன் கோயிலாகும்.[2] இத்தலத்தில் திருமால் வடிவிலிருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை.   


கோயில் அமைப்பு:குற்றாலநாதர் கோயிலின் சித்திர சபைக்கு எதிரேயுள்ள கோயில் குளம்


இக்கோயில் பிறகோயில்களைப்போல சதுர அல்லது நீண்டசதுரமாக அமையாது சங்கு வடிவில் அமைந்து இருப்பது தனிச்சிறப்பாகும்.


    இறைவன் - குற்றாலநாதர் - திரிகூடநாதர்
    இறைவி - குழல்வாய் மொழியம்மை


இக்கோயிலில் குற்றாலநாதர், குழல்வாய்மொழி சன்னதிகளும், செண்பக விநாயகர், அம்பல விநாயகர். ஆறுமுக நயினார். தட்சணாமூர்த்தி, கன்னி விநாயகர். சந்திரன். வான்மீகிநாதர். சம்புகேஸ்வரர், அண்ணாமலைநாதர். திருமூலநாதர், ராமலிங்கர், சுப்பிரமணியர், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், கைலாசநாதர், துர்க்கை, பராசக்தி, சைலப்பர், வல்லப விநாயகர், நன்னகர பெருமாள், பாபநாசர்-உலகம்மாள், நெல்லையப்பர்-காந்திமதியம்மாள், மணக்கோலநாதர், நாறும்பூநாதர், சகஸ்ரலிங்கம், பால்வண்ணநாதர், சொக்கலிங்கர்-மீனாட்சி, சாஸ்தா, மதுநாதேஸ்வரர்-அறம்வளர்த்த நாயகி, சோமலிங்கர், அகஸ்தியர், வாசுகி, மகாலிங்கம், சங்கரலிங்கம், காசிவிஸ்வநாதர், பெரிய ஆண்டவர் சாஸ்தா, சிவாலய முனிவர், பைரவர் உபசன்னதிகளும் உள்ளன.


இங்குக் கோயில் குளம், கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.


திருஞான சம்பந்தர் தேவார பதிகம்


    வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்
    கொம்பார் சோலைக் கோலவண் டியாழ்செய் குற்றாலம்
    அம்பானெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை
    நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்.


கோயிலின் தொன்மை


மாணிக்கவாசகர் கி பி மூன்றாம் நூற்றாண்டுகாலத்தவர் என்பதால் இத்தலம் அதற்கும் முந்தையது ஆகும்.


தேவாரம் பாடல்களில் குறிப்பிட பட்டுள்ளதால் 6 ஆம் நூற்றாண்டில் இந்த கோவில் இருந்துள்ளது என்பது சான்றாகும்.


கி.பி. 10 ம் நூற்றாண்டு முதல் 17 ம் நூற்றாண்டு வரையும் , அதற்கு முந்தையக் கல்வெட்டுகளும் பல உள்ளன.


பாண்டிய மன்னன் சடையன் மாறன் (கி.பி. 921-922) காலத்தில் இத்திருக்கோயிலின் பெருமை தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்ததும், குற்றாலம் தேவார நாட்டின் பகுதியாக விளங்கியமையும், ’பாசுபதப் பெரு மக்கள்’ எனும் ஆலோசனைச் சபை இத்திருக்கோயிலுக்கு இருந்தது என்பதும் தெரிய வருகின்றது


தைலமுழுக்கு


அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்கு தைல அபிசேகம் நடைபெறுகின்றது.


இறைவனுக்கு அபிசேகம் செய்யப்பட்ட மகாசந்தனாதித்தைலம் கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது.


இது பல மூலிகைகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுகின்றது. இது தலைவலி, வயிற்றுவலி சயரோகம் முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது.குற்றாலநாதருக்கு வற்றாக் குடிநீரும் மாறாத் தலையிடியும்

எனும் சொல் வழக்கு உள்ளது


நாளை  திருக்குற்றாலம் – சித்திர சபை – (ம ) 


பகுதி (2) தொடரும்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


திருச்சிற்றம்பலம்.


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்