காசிரங்கா தேசிய பூங்கா திறப்பு

  


இன்று முதல் "காசிரங்கா தேசிய பூங்கா" சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுகிறது.


அசாம் மாநிலத்தில் உள்ள "காசிரங்கா தேசிய பூங்கா" கொரோனா காரணமாக ஏழு மாதங்கள் கழித்து  21.10.2020 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது.


இதனை, அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் இந்த புகழ்பெற்ற பூங்காவை முறையாக மீண்டும் திறந்து வைக்கவுள்ளார்.


இந்நிலையில், மீண்டும் திறந்த பிறகு யானை சபாரிகள் கிடையாது. ஆனால், அவை நவம்பர் முதல் மீண்டும் தொடங்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.


கொரோனா தோற்று காரணமாக இது மார்ச் மாதத்தில் மூடப்பட்டது.  இது, கடந்த 112 ஆண்டுகளில் மிகநீண்ட நாள்களாக மூடப்பட்டது இதுவே முதல்முறையாகும்.