அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் பெயர் 07/10/2020 அறிவிப்பு

 அ.இ.அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் பெயர் 07/10/2020 அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை, மெரினாவில் உள்ள, எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நினைவிடத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.


அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக, இந்நாள் முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே போட்டி எழுந்துள்ளது.


முதல்வர் வேட்பாளர் யார் என்பது, இன்று அறிவிக்கப்படும் என, அக்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், பரபரப்பு அதிகரித்துள்ளது.


ஏற்கனவே, ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் நடத்தி, பன்னீர்செல்வம் நெருக்கடி கொடுத்த சம்பவம் நடந்தது.


இந்நிலையில் அதேபோன்ற சம்பவங்கள், மீண்டும் நடந்து விடக் கூடாது என்பதில், தமிழக காவல்துறை மற்றும் பொதுப்பணி துறையினர் உறுதியாக உள்ளனர்.


தற்போது, எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நினைவிடத்திற்குள், அ.தி.மு.க., தொண்டர்கள் நுழைய முடியாதபடி, கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.


மேலும், அண்ணா சதுக்கம் காவல் நிலையம் அருகே, பாதுகாப்பு பணிக்கு, காவலர்கள்  நிறுத்தப்பட்டு உள்ளனர்.


அதே நேரத்தில், முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் பட்சத்தில், முக்கிய தலைவர்கள் வந்து செல்வதற்காக, சிறப்பு வழிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.