பயம் நீக்கும் வராகி அம்மன் - பஞ்சமி திதி 06.10.2020)


நம் வாழ்வில் பல கஷ்டங்கள் நம் செயலால் ஏற்படுகின்றது. நம் வினைகளாலும், நாம் தற்ப்போது செய்து வரும் தவறான செயல்களால் பிரச்னைகளிலும், துன்பங்களிலும் சிக்கித் தவிக்கின்றோம்.


பலர் இதன் மூலம் எதிரிகளால் தொல்லைகளும் அனுபவிக்கும் நிலை இருக்கும். இப்படி எதிரிகளால் தொல்லைகளை அனுபவிப்பவர்கள் வராஹி அம்மனை வழிபடுதல் அவசியம்.


அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.


வராகி திருமாலின் வராக அம்சமாவார். இவர் வராகமெனும் பன்றி முகமும், எட்டு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்.

வராகி அம்மனை வழிபடுவோருக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. பக்தர்களை காப்பதில் சாந்த ரூபியாக, தாயாக இருக்கும் வராகி அம்மன், அவர்களின் எதிரிகளை அழிக்க ருத்ர அவதாரம் எடுப்பாள்.


பல கோயில்களில் தனி சன்னதிகளில் கருமை நிற ஆடை உடுத்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சி தருவார். இவர் சப்த கன்னிகளில் ஐந்தாவதாக இடம்பெறுகிறார்.


இவரின் ஆறு கரங்களில் வரத, அபயஹஸ்தத்துடன் உள்ளார். மற்ற மைகளில் சூலம் ஏந்தியும், கபாலம், உலக்கை, நாகத்தை பிடித்திருக்கிறார்.


சப்த கன்னிகள்:


பிராம்மி அம்மன், மகேசுவரி அம்மன், கௌமாரி அம்மன், நாராயணி அம்மன், வராகி அம்மன், இந்திராணி அம்மன், சாமுண்டி அம்மன் என சப்தகன்னிகள் உள்ளனர்.


எட்டு வராகிகள்


மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள்.


கோயில்:


தஞ்சை பெரிய கோயிலில் தனி சன்னதியாக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் செங்கப்பள்ளியில் அருள்மிகு செரைக்கன்னிமார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோயில் உள்ளது. இக்கோயில் உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாகக் கருதப்படுகிறது.[1]
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் கோயில் வராகி வழிபட்ட தலமாக அறியப்படுகிறது. [2]
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் எனும் பெயரில்) கோவில் உள்ளது. இங்கு வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள என்.சுப்புலாபுரம் (எ) நரிப்பட்டி என்ற ஊரில் வாரஹி அம்மன் கோவில் உள்ளது
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சப்தமாதா தனி சன்னதியாக சப்தமாதாகள் உடன் வாரஹி அம்மன் உள்ளார்


பூஜை முறைகள் :


துளசி மற்றும் வில்வ இலைகளை ஒரு கைப்பிடி அளவு போட்டு குளிப்பது நல்லது.


பூஜையறையில் பன்னீரில் மஞ்சளை மற்றும் ஏலக்காயை கலந்த நீரை வைக்க வேண்டும். இதை வீடு முழுவதும் தெளிப்பது நல்லது.


வாராஹி வழிபாட்டிற்கு தனி பூஜை அறை இருந்தால் சேமமாக இருக்கும். அதே போல் அன்னையின் படத்திற்கு அருகில் விநாயகர் படத்தை வைப்பது நல்லது. வடக்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி இப்படம் இருக்க வேண்டும்.


பூஜையறையில் பன்னீரில் மஞ்சளை மற்றும் ஏலக்காயை கலந்த நீரை வைக்க வேண்டும். இதை வீடு முழுவதும் தெளிப்பது நல்லது.


வாராகி பூஜைக்கு நெய்வேதியம், பூக்கள் என பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வைக்க வேண்டும். முதலில் குருவை வணங்க வேண்டும், பிறகு விநாயகரை தரிசித்து வாராஹி நமஹ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.


பூஜை தொடங்கிய பிறகு இடையில் எழுக்கூடாது. அதேபோல் வெளியூர் எங்கேயாவது சென்று விட்டால் அங்கே அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.


மலர்களைக் கொண்டு பூஜை செய்து முடித்தவுடன் அம்மனுக்கு நைவேத்தியம் அளித்து சாஷ்டாங்கமாக கீழே படுத்து வணங்க வேண்டும். பிறகு நைவேத்தியத்தை அனைவருக்கும் பகிரவும்.


வராஹி அம்மனை வழிபடுபவர்கள் வெள்ளை மொச்சைப் பருப்பை வேக வைத்து அதனுடன் தேன் மற்றும் நெய்யை கலந்து நைவேத்தியமாக படைத்து வழிபட்டு வர வேண்டும்.

இப்படி தினமும் வராகி அம்மனை வழிபட்டு வருவதால் எதிரிகளின் தொல்லை நீங்கும், அதோடு தன வசியம் ஆகும், தொழில், வியாபாரம் விருத்தி அடைந்து செழிக்கும்.


வராகி அம்மனை வழிபட பஞ்சமி திதி மிகச்சிறந்ததாகும். பஞ்சமி திதி அன்று வராஹி அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபடுவதால் செல்வங்கள் உங்களை தேடிவரும். பிரச்னைகள் விலகும்.


வராகி :தியான சுலோகம்


முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:


வராகி :மந்திரம்
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:


வராகி காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்


வராகி மாலை: 
வீரை கவிராச பண்டிதர் என்பவரால் வராகி மாலை என்னும் நூல் 16-ஆம் நூற்றாண்டு இயற்றப்பட்டது.


சிவனின் ஒரு பாதி சக்தி. சக்தியின் பாகத்தை 7 கூறுகளாக பகுக்கப்படுகிறது.
அவர்கள் தான் சப்த கன்னிகள்.இந்த வராகி மாலையில் வராகி அம்மன் குறித்து வீரை கவிராச பண்டிதர் பாடியுள்ளார்.


பஞ்சமி, அமாவாசை போன்ற நாட்களில் நீங்கள் குறைந்தது ஐந்து பேருக்கு அன்னதானம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். எனவே உங்கள் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வழியை இந்த வாராஹி அம்மன் வழிபாடு மூலம் பெறலாம்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்