கின்னஸ் சாதனை படைத்த நகைக்கடை உரிமையாளர்


7,801 வைரக் கற்கள் கொண்ட மோதிரம்.


நகைகள் என்றாலே விதவிதமாக, அழகான தங்க நகைங்களை நாம் பார்த்திருப்போம். அதே சமயம் வைரத்தில் செய்யப்பட்ட விதவிதமான நகைகளை பார்ப்பது சற்று கடினம் தான்.


இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த கோட்டி ஸ்ரீகாந்த் என்பவர் நகைக்கடை ஒன்றை வைத்துள்ளார்.


 ஐதராபாத்தை சேர்ந்த ‘டயமண்ட் ஸ்டோர் பை சந்துபாய்’ வைர நகைகடை நிறுவனர் கோட்டி ஸ்ரீகாந்த். இவர் ஒரே மோதிரத்தில் 7801 ஒரிஜினல் வைர கற்களை பொருத்தி உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.


“தி டிவைன் - 7801 பிரம்ம வஜ்ர கமலம்” என பெயரிடப்பட்டுள்ளது இந்த மோதிரம்.


மருத்துவ குணங்கள் உடையதும், மிகவும் புனிதமாகக் கருதப்படுவதுமான அரிய மலர் பிரம்ம கமலம் அதன் பெயர் இந்த மோதிரத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. வைரம் சமஸ்கிருதத்திலும், தெலுங்கிலும் வஜ்ரா என்று அழைக்கப்படுகிறது. மிகவும் இயற்கையான மற்றும் தூய்மையான வடிவத்தில் வழிபாட்டுக்கான பொதுவான பொருளாக அமைந்ததால் இந்த மலரின் பெயர் மோதிரத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.


மோதிரத்தை வடிவமைத்த கோட்டி ஸ்ரீகாந்த் கூறுகையில், “ஒரே வளையத்தில் அமைக்கப்பட்ட அதிகமான ஒரிஜினல் வைரங்கள்" என்னும் சான்றை கின்னஸ் வழங்கியது. இதில் பயன்படுத்தப்படும் வைரங்கள் இயற்கை வைரங்களாகும்.


நகைகளில் தனித்துவமான கலைத் படைப்புகளை உருவாக்குவதற்கான எனது ஆர்வத்தை அங்கீகரித்த கின்னஸ் உலக சாதனை நிறுவனத்திற்க்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.


நான் உருவாக்கிய தலைசிறந்த படைப்புக்கு உலக அளவில் விருது கிடைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது எங்கள் படைப்புகளில் ஒரு பெரிய மைல்கல் ஆகும்.


மோதிரத்தை ஏலம் விடுவதன் மூலம் இந்த வெற்றியை எங்கள் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் என்று கூறினார்.


கோட்டி ஸ்ரீகாந்த் நகை வடிவ மைப்பில் கை வடிவமைப்பு மற்றும் கணினி நகை வடிவமைப்பு ஆகியவற்றில் டிப்ளமோ பட்டம் பெற்றவர்.


உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பயின்றவர், அவர் மேலும் அமெரிக்காவின் ஜெமலாஜிக்கல் இன்ஸ்டிடியூட் ஆல் சான்றளிக்கப்பட்ட வைர நிபுணர் ஆவார். அவரது தந்தை சந்திரபிரகாஷிடம் பணி புரியும்போது நகை வடிவமைப்பு வர்த்தகத்தின் நுணுக்கங்களை இவர் கற்றுக் கொண்டார்.


இந்நிலையில், இவர் "பிரம வஜ்ரா கமலம்" என்ற பெயரில், பூ வடிவிலான வைர மோதிரத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பிரம கமலம் என்பது, இமயமலையில் வளரக் கூடிய, அரியவகை பூக்களில் ஒன்றாகும்.