உலக முதியோர் தினம் (01/10/2020)


 


முதியவர்களை ஒவ்வொரு மனிதனும், சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஆண்டுதோறும் அக்டோபர் 1 ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு 45/106 தீர்மானத்திற்கமையவே இந்த தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இன்றைக்கு அதிகளவில் குழந்தை பிறப்பு, அதிக அளவு இறப்பு என்று இருந்த நிலைமாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது.

 

இதனால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. உலக அளவில் 2008ம் ஆண்டு நிலவரப்படி 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் இரு மடங்காக உயரும் என்று தெரிகிறது. வயதானவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தான்.

உலக முதியோர் தினம் முதியோரை மேன்மைப்படுத்தும் வகையில் கடந்த 1990ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாக ஐ.நா. அறிவித்தது.


 

கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 

முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக, கலாச்சார, அரசியல்ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

 

21ஆம் நூற்றாண்டில் வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளக்கூடிய சவால் மற்றும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டும், அனைத்து வயதினரையும் முன்னிலைப்படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.


 

சுதந்திரமும் மதிப்பும் ‘அம்மிக் கல்லுக்கு குழவி எவ்வளவு அவசியமோ அதுபோல வீட்டிற்கு ஒரு கிழவி அவசியம்' என்பார்கள்.


 


ஏனெனில் வயதானவர்களின் அனுபவங்கள் இளைய தலைமுறையினருக்கு அவசியமானவை. ஆனால் எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கின்றனர்.

 

பெற்றோர்களையும், வயதானவர்களையும் பாரம் என்று கருதி முதியோர் இல்லங்களுக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர்.

 

இதனால் வயதானவர்களுக்கு தனிமையும், வெறுமையுமே மிஞ்சுகிறது. பாதுகாப்பின்மை காரணமாக வயதானவர்களுக்கு

பிறந்த குழந்தைகளுக்கு மட்டும்தான் எதிர்பார்ப்புகள் இருக்கும் என்றில்லை வயதான மூத்த குடிமக்களுக்கும் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும்.

 

பாதுகாப்பு குறித்த அச்சம் இருக்கும். வயதானவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கவேண்டும்.

 

அவர்களுக்கு உரிய உரிமைகளையும், சுதந்திரத்தையும் அளிக்கவேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலேயே அக்டோபார் 1ம் தேதி சர்வதேச முதியோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

 


பாதுகாப்பின்மை காரணமாக வயதானவர்களுக்கு மனஅழுத்தமும், விரக்தியும் அதிகரிக்கிறது.

 

எனவே வயதானவர்களையும் குழந்தைகளைப் போல பாவித்து அவர்களுக்குரிய சுதந்திரத்தையும், மதிப்பையும் அளிக்கவேண்டும் சத்தான உணவுகள் வயதானவர்களுக்கு நோய் தாக்குதல் ஏற்படுவது இயல்பானது தான்.

 

எனவே குழந்தைகளுக்கு எந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவுகளை செய்து கொடுப்போமோ அதேபோல வயதானவர்களுக்கும் ஆரோக்கியமான உணவுகளை செய்து தரவேண்டும்.

 

ஏனெனில் வயதாக வயதாக உடலில் உள்ள சக்தி குறைகிறது. எனவே சத்தான தானியங்கள், சோயா போன்றவை ஊட்டச்சத்துள்ள உணவுகளை சமைத்துக்கொடுக்கவேண்டும்.

 

முக்கியமாக வயதானவர்களுக்கு உணவில் ஆர்வம் குறைந்துவிடும். ஜீரண உறுப்புகள் சற்றே செயலிழந்து விடும். ருசி உணர்வும் குறைந்துவிடும். எனவே அதற்கேற்ப சத்தான உணவுகளை சமைத்துத் தர வேண்டும்.
 

வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம், நீரிழிவு, இதயநோய், போன்றவைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் அவர்களுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை செய்து கொடுக்கவேண்டும்.

 

கால்சியம், வைட்டமின் மாத்திரைகளாக வாங்கிக் கொடுப்பதில் எந்த பயனும் இல்லை. நார்ச்சத்துள்ள, வைட்டமின்சத்துள்ள காய்கறிகள், பழங்களை வாங்கிக் கொடுக்கவேண்டும்.

 

மறதிநோய் ஏற்பட்டுள்ள வயதானவர்களை சிறப்பு கவனத்துடன் கையாள வேண்டும். குளிர்ச்சியான பொருட்களை இரவில் தவிர்த்துவிடுங்கள். அதேபோல் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை மட்டுமே அவர்களுக்கு உண்ணக்கொடுங்கள்.

 

முதியவர்களை நாம் நன்றாக கவனிக்கிறோம். அவர்களுக்கு மதிப்பளிக்கிறோம் என்று தெரிந்தாலே அவர்களிடம் இருந்து மன அழுத்தம் வெளியேறி மகிழ்ச்சி குடியேறும்.

நமது பெற்றோர் மற்றும் மாமியார் மாமனார் பேணி பாதுகாக்க வேண்டும் என்று  கேட்டுக் கொள்கிறேன்

 


 

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள்  குழுவின் பயணம் தொடரும். 

 

மோகனா  செல்வராஜ்