ககன்யான் திட்டம் தாமதமாகலாம் 


ககன்யான்' திட்டத்தின் கீழ், வீராங்கனை உள்பட 3 பேரை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. சுதந்திர தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய உரையில், ககன்யான் திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியாவிலிருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில், இத்திட்டம் தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அணுசக்தி ஆற்றல் மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:


இந்த முயற்சியில் இஸ்ரோ, கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் தங்களின் பங்களிப்பை வழங்கும்.


இஸ்ரோ அட்டவணைப்படி, ஆளில்லாமல் செயல்படுத்தப்படும் முதலிரண்டு திட்டங்கள் அடுத்த 30-இல் இருந்து 36 மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும்


கொரோனா தொற்று காரணமாக ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகள் தொய்வடைந்துள்ளதால் தாமதமாகலாம்


விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாகலாம்


குறித்த காலத்திற்குள் திட்டத்தை செயல்படுத்த இயலாத நிலை-சிவன், இஸ்ரோ தலைவர்