பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்.


 


ரிசர்வ் பேங்க் அப் இந்திய அல்லது வெளி மார்க்கெட்டில் இருந்து நிதி பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


மேலும், புதுச்சேரி மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கோரியும் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.


இதனிடையே, சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொளி மூலம் நடைபெற்ற 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ரிசர்வ் வங்கியிடம் மாநில அரசுகள் கடன் பெற்று கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கியிடம் கடன் வழங்குவது தொடர்பாக வலியுறுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.