மாநில செய்திகள்


திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து பெரியாரிய அமைப்புகள், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்டது.பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உமா பாரதி ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்.1-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். மேலும் மனித சங்கிலி, ஊர்வலம், ஆர்பாட்டத்துக்கு காவல் ஆணையர் தடை விதித்து அனைத்து காவல் நிலையத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 998,276 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 33,046,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 24,401,384 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,360  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.