கருப்பட்டி அப்பம் வகைகள்


கருப்பட்டியில் சுவைக்கு ஏற்ப மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. இதிலுள்ள இரும்புச்சத்து ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.


இது கல்லீரலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது.


பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது.


கருப்பட்டியை உணவு உட்கொண்ட பின் சிறிய துண்டு எடுத்து சாப்பிட்டால் செரிமான சக்தியை தூண்டி எளிதில் உணவு செரிமானம் அடைய செய்யும். குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு செயல்படுகிறது.


சரி இப்படி பல மருத்துவ குணங்களைக் கொண்ட கருப்பட்டியில் அப்பம் எப்படி செய்வது என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.


திணை கருப்பட்டி அப்பம்


தேவையானவை:


கருப்பட்டி – 100 கிராம்


தினை மாவு – 100 கிராம்


ஏலக்காய்த்தூள் – சிறிதளவு


நெய் – 100 மில்லி


தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்


செய்முறை:


கருப்பட்டியை நசுக்கி தினை மாவில் போட்டு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.


குழிப்பணியாரக் கல்லில் சிறிது நெய் தடவி மாவை விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து அப்பத்தை தயாரிக்கவும்.


குறிப்பு: மாவுடன் வாழைப்பழத்தை நன்கு மசித்துப் போட்டும் தயாரிக்கலாம். பண்டிகைகளுக்கு மிகவும் ஏற்றது இந்த திணை கருப்பட்டி அப்பம்.


பலாப்பழ அப்பம்:


தேவையான பொருட்கள்:


கோதுமை மாவு - 1 கப்
கருப்பட்டி - 250 கிராம்
பலாச்சுளை - 10
தேங்காய் துருவல் - 1 கப்
நெய் - 50 கிராம்
எண்ணெய், ஏலப்பொடி, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:


வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து, காய்ச்சி கரைசலாக்கவும். இதில், கோதுமை மாவை, அரைமணி நேரம் ஊற வைக்கவும்.


வாணலியில், நெய் ஊற்றி சூடானதும், தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய பலாச்சுளை, ஏலக்காய் துாள் போட்டு நன்றாக கிளறவும்.


இதை, வெல்லக் கரைசலில் சேர்த்து, இட்லி மாவு பதமாக்கவும். இந்த மாவை சிறிய அப்பங்களாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான, 'பலாப்பழ அப்பம்' தயார்.


நாளை உங்களது வீட்டில்  கருப்பட்டி அப்பம்  செய்து அனைவரையும் அசத்திடுங்கள்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன் கார்த்திகா