தோனியின் சாதனையை முறியடிப்பு


ஆஸ்திரேலியா வீராங்கனை அலிஸா ஹீலி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்தார்.


நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறார். 


இன்று இரண்டாவது போட்டியின் போது 30 வயதான அலிஸா ஹீலி தோனியை விட அதிக விக்கெட்டை பறித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.


 டி 20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக அலிஸா ஹீலி  99 டி20 ஐ இன்னிங்ஸில் 92 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 97 இன்னிங்ஸ்களில் 91 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.  அலிஸா ஹீலி தோனியை விட ஒரு விக்கெட் அதிகமாக வீழ்த்தி உள்ளார்.


மூன்றாவது இடத்தில் 74 விக்கெட்டை வீழ்த்தி சாரா டெய்லர் உள்ளார். ரேச்சல் பூசாரி 72, மெரிசா அகுலேரா 70  விக்கெட்டை வீழ்த்தி அடுத்த இடத்திலும் உள்ளனர்.