அமைச்சர் செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு

 மதுரை மாவட்டம், பரவையில் கொரோனா நிவாரணம் வழங்கும் முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘‘தமிழகத்தில் ஊடகங்கள் அதிமுகவுக்கு எதிராக செயல்படுகின்றன.


நாங்கள் வெள்ளைக்காரனுக்கே பயப்பட்டதில்லை. ஜெயில் எல்லாம் எங்களுக்காக கட்டப்பட்டதுன்னு... அப்போதே தெரிவித்தவன் நான்’’ என்றார்.


ஏற்கனவே, சர்ச்சை பேச்சுக்கு பஞ்சமில்லாத அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்தப் பேச்சும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.