மாநிலச் செய்திகள் -அரசு அலுவலகங்களும் சனிக்கிழமைகளில் செயல்படும்செப்டம்பர் 1ம் முதல் தமிழக அரசின் அனைத்து அலுவலங்களும் 100% ஊழியர்களுடன் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக 50% ஊழியர்களுடன் இயங்கி வந்த அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவித்தது.


ஆனால் தற்போது தினமும் 100 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கி வருவதால் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.


ஆனால் இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுமுறைகளை கணக்கில் கொண்டு தமிழகத்தில் அரசு அலுவலங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமைகளில் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


அரசின் இந்த அறிப்பை அடுத்து அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது__________________


தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  புதிய கல்விக்கொள்கை 2020: அரசுக்கு பரிந்துரை வழங்க அபூர்வா ஐஏஎஸ் தலைமையில் குழு அமைப்பு - அரசாணை


___________________


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் நெரிசலை தவிர்க்க, ஆன்லைன் பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் மீண்டும் இலவச லட்டு வழங்கப்படுகிறது.


_____________________


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17,937 கன அடியில் இருந்து 21,339 கன அடியாக அதிகரித்துள்ளது