சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் நோட்டீஸ்


மத்திய அரசு, கடந்த 2017 நவம்பர், 8 ஆம் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என, அதிரடியாக அறிவித்தது.


அந்த சமயத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 


இதனையடுத்து, 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.


சென்னை போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சொத்துக்களில், ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் வேதா நிலையத்திற்கு எதிரே கட்டிக்கொண்டிருக்கும் புதிய கட்டிடமும் அடங்கும்.


பினாமி தடுப்புப் பிரிவு சட்டத்தின்கீழ் தற்போது, ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 


சென்னை போயாஸ் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும்  சசிகலாவிற்கு   சொந்தமான கட்டிடத்தின் பணிகளை முடக்கி, பணிகளை நிறுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது .


பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை என  வருமான   வரித் துறை  தகவல் தெரிவித்துள்ளது.