பிரபல குணச்சித்திர நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்.

 பிரபல வழக்கறிஞரும் நடிகருமான துரை பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார்.தமிழ்த் திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் துரை பாண்டியன்.


இவர் நுரையீரல் பிரச்னை காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். 


விக்ரம் நடித்த ஜெமினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த துரை பாண்டியன், குற்றவியல் வழக்குகளில் ஆஜராகி வந்தார். 


இந்நிலையில் துரைப்பண்டியன் நெஞ்சுவலி காரணமாக 09.09.2020 உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அதிமுக நிர்வாகிகள் என பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.