இலந்தங்குழியைச் சேர்ந்தவர் விக்னேஷ் அரியலுார் மாணவருக்கு அஞ்சலி

 அரியலுார் மாவட்டம் இலந்தங்குழியைச் சேர்ந்தவர் விக்னேஷ் 19, 2017ல் நடந்த பிளஸ் 2 தேர்வில் 1006 மதிப்பெண் பெற்ற இவர் தனியார் நீட் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்றார்.

இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாததால் செப்.13ல் நீட் தேர்வை எழுத தயாராகி வந்தார்.


மிகுந்த மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் நேற்று முன்தினம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.10/09/2020 அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


மாணவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன் பொது நிவாரண நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் வழங்க  தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு அல்லது அரசு சார்ந்த பணி வழங்கப்படும்.பெற்றோர்கள் தங்களது  குழந்தைகளின் மனநிலை தேவையறிந்து செயல்பட வேண்டும் எனவும்  தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விக்னேஷின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய உதயநிதி தி.மு.க. சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.

 

பா.ம.க. சார்பில் 10 லட்சம், வி.சி.க. சார்பில் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.