பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று உறுதி


 


பிரேசில் நாட்டின்  பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மர், தற்போது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில், நடைபெற்ற சாம்பியன் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் பைரன் முனிச் கிளப் அணியிடம் பாரிஸ் சாயின்ட் ஜெர்மைன் அணி தோல்வியை தழுவியது.


இந்நிலையில், அணி சார்பில் நடத்தப்பட்ட பரிசோதனையில் நெய்மர் உட்பட3 வீரர்களுக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த தகவலை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.