முதலில் தொழில்... பிறகு அரசியல்... வசந்தகுமார் மகன்


மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் முழு நேர அரசியலுக்கு வருவதற்கு முன் தனது தந்தை கட்டிக்காத்து வந்த தொழில் சாம்ராஜ்யத்தில் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறார்.


வசந்தகுமாரின் 16-ம் நாள் காரியத்துக்காக கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ள விஜய்வசந்தை கட்சியினரும் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் தொடர்ந்து சந்தித்து பேசி வருகின்றனர்.


அவர்களிடத்தில் பேசும் விஜய் வசந்த், தம்மை பொறுத்தவரை முதலில் தொழில் பிறகு தான் அரசியல் எனக் கூறி வருகிறாராம்.

அரசியலா? தொழிலா? என்ற குழப்பத்தில் இருந்து வந்த விஜய் வசந்த் முதலில் தொழிலில் கவனம் செலுத்துவது என்றும் பிறகு அரசியலை பார்த்துக் கொள்ளலாம் எனவும் முடிவெடுத்திருக்கிறார்.


வசந்தகுமார் உயிருடன் இருந்தபோது தமது இரண்டு மகன்களுக்கும் அவர் அடிக்கடி கூறிய அறிவுரைகள், ''தொழில் இருந்தால் தான் எல்லாம், அது இல்லை என்றால் யாரும் மதிக்கமாட்டார்கள், அதனால் தொழில் மீதான கவனத்தை சிதறவிடாதீர்கள்'' என்பது தான்.


தற்போது தந்தையின் அறிவுரைக்கேற்ப விஜய் வசந்தின் முடிவுகள் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.







Popular posts