சூர்யாவின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


நடிகர் சூர்யாவின் சென்னை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.


தமிழ் திரையுலகின் மிக பிரபலமான நடிகராக வலம் வரக்கூடிய நடிகர் சூர்யாவிற்கு பல்வேறு மாவட்டங்களிலும் நடிகர் சங்கங்கள் மற்றும் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வரக்கூடிய சூர்யாவின் அலுவலகத்திற்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர்கள் போன் செய்து மிரட்டியுள்ளனர்.


இந்த மிரட்டலை அடுத்து மோப்ப நாயுடன் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் அந்த அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


ஆனால் அங்கு வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே இது வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு இருப்பதாக கூறியது யார் என தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.