மணல் கடத்தலுக்கு உடந்தை- போலீசார் சஸ்பெண்ட்


திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கடத்தலுக்கு எதிராக எஸ்.பி., மணிவண்ணன் கடும் நடவடிக்கை எடுத்துவருகிறார்.

மணல் கடத்தலுக்கு துணைபோனதாக ஏற்கனவே வீரவநல்லுார் எஸ்.ஐ.,கார்த்திகேயன், மூலைக்கரைப்பட்டி போலீஸ்காரர் லட்சுமிநாராயணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.


எஸ்.பி.,யின் கட்டுப்பாட்டில் செயல்படும் தீவிர குற்றப்பிரிவு எஸ்.ஐ.,கருத்தையா, ஏட்டுகள் சுதாகர், ரத்தினவேல், முண்டசாமி, லட்சுமிநாராயணன் ஆகிய 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.,மணிவண்ணன் உத்தரவிட்டார்.


மணல் கடத்தலுக்கு துணையாக இருந்த உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் மற்றும் 2 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி