காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்


காஞ்சிபுரம்: விவசாய மசோதாவை எதிர்த்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் இருக்கும் கீழ் அம்பியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது.


மாநில உரிமைகளை பாதுகாக்க முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவைப்படுகிறார் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்


இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு செல்லும் முன்பு கீழ் அம்பி என்ற இடத்தில் விவசாய நிலத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது, சகதி நிறைந்த வயலில் வேட்டியை மடித்துக் கொண்டு ஸ்டாலின் இறங்கினார். அங்கு பணியாற்றிக் கொண்டு இருந்த தொழிலாளர்களிடம் பேசினார்.


விவசாயத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அப்போது பேசி அறிந்து கொண்டார்.