ஆண்டிபட்டி அருகே ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் வகுப்பு கற்றுக்கொள்ள தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்துக் கொண்டார்.
இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் படிப்பால் மாணவன் தற்கொலைச் சம்பவம் ஆண்டிபட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற தற்கொலைகளை தடுக்க ஆன்லைன் கல்வி தொடர்பாக கல்வித் துறை சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.