தற்கொலை -இரண்டாம் இடத்தில் தமிழகம்


இந்தியாவில் அதிகம் தற்கொலை செய்து கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் மகராஷ்டிரா உள்ளது இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது.


கடந்தாண்டு மகாராஷ்டிராவில் 18,916 பேரும் தமிழகத்தில் 13 ஆயிரத்து 493 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மேற்கு வங்கம் ,மத்திய பிரதேசம் கர்நாடகா மாநிலங்கள் உள்ளது.


கடந்தாண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் 3.7 சதவீதம் பேர் பட்டதாரிகள். குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்பவர்களின் வரிசையில் 16 தற்கொலைகள் உடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.கடந்த ஆண்டு நாட்டிலேயே சென்னையில் நகரில் தான் அதிகம் பேர் தற்கொலை செய்ததாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.


சென்னையில் 2018 ஆம் ஆண்டு 2,102 பேரும் செய்த நிலையில் கடந்த ஆண்டு 2,461பேர் தற்கொலை செய்துள்ளனர்.


டெல்லியில் கடந்த ஆண்டு 2,423 வெறும் பெங்களூருவில் 2,081 பேரும், மும்பையில் ஆயிரத்து 229 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.