தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து சேவை


தமிழகத்தில் 166 நாட்களுக்கு பிறகு மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து அதிகாலை முதல் தொடங்கியுள்ளது.


தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் (எஸ்இடிசி) சார்பில் ஏசி, அல்ட்ரா டீலக்ஸ், டீலகஸ், ஏசி சிலிப்பர் சீட்டர் உள்ளிட்ட பிரிவுகளில் நாள்தோறும் 1,200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன.


இந்த பேருந்துகள் சென்னை-திருச்சி, சேலம், மதுரை, கோவை, நெல்லை, நாகர்கோவில், ஊட்டி, பெங்களூரு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்கின்றன. 


பயணம் செய்ய விரும்புவோர், www.tnstc.in என்ற இணையதளத்தின் வழியாகவும், tnstc என்னும் மொபைல் ஆப் வழியாகவும் முன்பதிவு செய்யலாம்.


மேலும் மாநிலம் முழுவதும் உள்ள எஸ்இடிசி முன்பதிவு மையங்களுக்கு சென்று நேரடியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


இதில், ஏ.சி பஸ் சேவை மட்டும் கிடையாது. ஒரு பஸ்சுக்கு, 26 பேரை மட்டுமே ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.