சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வு


 


தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில்  தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது.


இவைகளில் திருச்சி, சமயபுரம், திருப்புராயத்துறை, மணவாசி, செங்குறிச்சி, திருமாந்துறை உள்ளிட்ட  20 சுங்கச்சாவடிகளில் இன்று  முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


வாகனங்களுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஆண்டுதோறும் வழக்கமாக நடைமுறைதான் என தேசிய நெடுஞ்சாலைதுறை  அதிகாரிகள் கூறியுள்ளனர்.


கொரோனாவால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.