குற்ற செய்திகள்


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆசாரங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (45). இவர் தனக்கு சொந்தமான வைர கற்கள் பதித்த 4 மோதிரத்தை (52.6 கிராம்) விற்பனை செய்வதற்காக நண்பர்கள் ராவணன், வழக்கறிஞர் பிரகலாதன் ஆகியோருடன் காரில் கடந்த 13ம் தேதி கூட்டேரிப்பட்டு பகுதிக்கு சென்றார்.


அங்கு சென்னையை சேர்ந்த புரோக்கர் அருள்முருகன், செந்தில் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களுடன் காரில் கூட்டேரிப்பட்டு- தீவனூர் சாலையில் சென்றார். கோபாலபுரம் என்ற இடத்தில் வந்தபோது காரை மடக்கி வழிமறித்த 10 பேர் கொண்ட மர்மகும்பல், மிளகாய் பொடி தூவி கத்திமுனையில் கருணாநிதியிடம் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான நான்கு வைர மோதிரங்களை பறித்துக்கொண்டு தப்பியது.


_____________________


சென்னை கோடம்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் அந்தோணி(33) என்பவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். குடிபோதை தகராறில் நண்பர்கள் வெறிச்செயல் என தகவல் வெளியாகியுள்ளது.