சிவன் தன் தலையை பிறை சூடியதற்கான காரணம்

சிவன் தன் தலையை பிறை சூடியதற்கான காரணம் பற்றிய பகிர்வுகள் :


 சந்திரனுக்கு அடைக்கலம் தந்த சிவன்இந்து மதத்தின் மிக முக்கியமான கடவுள்களில் ஒருவர் சிவபெருமான். பொதுவாக சிவபெருமான் மிகவும் கோபப்படக்கூடிய கடவுள் என்று அனைவராலும் கூறப்படுவபவர். ஆனால் உண்மையில் அவர் கெட்டவர்களுக்கு மட்டும்தான் ருத்ர மூர்த்தி, தன் பக்தர்களுக்கு எப்போதுமே அவர் சாந்த மூர்த்திதான். தன்னை முழுமையாக நம்பும் பக்தர்களுக்கு சிவபெருமான் அவர்கள் வேண்டும் வரங்களை வழங்கக்கூடியவராவார்.


பொதுவாக மற்ற கடவுள்களிடம் இருந்து சிவபெருமான் மிகவும் வித்தியாசமானவர். அதை நீங்கள் அவரின் உருவத்தில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

 

மற்ற கடவுள்கள் ஆபரணங்களில் ஜொலிக்க சிவபெருமானோ வெறும் தோல் ஆடையை உடுத்திக்கொண்டு கையில் திரிசூலத்துடன் காட்சியளிக்கிறார்.

 

அவர் அணிந்துள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தமும், கதையும் உள்ளது. அந்த வகையில் அவர் தலையில் பிறை வடிவில் நிலா இருப்பதற்கும் காரணம் உள்ளது.

 


சிவபெருமானுக்கு சந்திரசேகர் என்று ஒரு பெயர் உள்ளது. அதற்கு காரணமே அவர் தலையில் இருக்கும் பிறைதான். சந்திரன் என்றால் நிலா என்று பொருள் சேகர் என்பதற்கு உச்சம் என்பது பொருள்.

 

உச்சத்தில் நிலவை கொண்டவனே என்பதன் அர்ததம்தான் சந்திரசேகர் எனபதாகும். ஆனால் சிவபெருமான் ஏன் தலையில் நிலவை வைத்திருக்க வேண்டும்.

அந்த காரணத்தையும், அதன்பின் இருக்கும் கதையையும் இந்த பதிவில் பார்க்கலாம்.சில புராண குறிப்புகளின் படி பிரம்மாவின் மகனான தக்ச பிரஜாபதி 27 நட்சத்திரங்களை தன் மகள்களாக கொண்டிருந்தார். அவரின் அனைத்து மகள்களும் சந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டனர். 27 மனைவிகள் இருந்தாலும் ரோகிணி மீது மட்டும் அதீத ஈர்ப்பு கொண்டிருந்தார். எனவே இதனால் மற்ற மனைவிகள் அவரின் மீது அதிக பொறாமை கொண்டனர்.

தட்சனின் மகள்களான 27 பெண்களை சந்திரன் திருமணம் செய்தான். திருமணத்தின் போது, அனைத்து பெண்களிடமும் சமமாக அன்பு செலுத்துவேன் என்று உறுதியளித்த சந்திரன், ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்தான்.
இதனால் மற்ற பெண்கள் அனைவரும் கலங்கி நின்றனர். இதுபற்றி அறிந்த தட்சன், கோபத்தில் சந்திரனின் அழகு தேய்ந்து போகட்டும் என்று சாபம் கொடுத்தான்.


பிரஜாபதியின் சாபத்தால் சந்திரன் கடலுக்குள் தஞ்சம் புகுந்தார். நிலவு இல்லாததால் இயற்கையின் சமநிலை சீர்குலைந்தது, இயற்கையை சார்ந்திருந்த அனைத்து உயிரினங்களும் இதனால் பாதிப்படைந்தனர். எனவே தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றுமப்டி வேண்டினர்.


தன்னிடம் இருந்த பாதி ஒளியை வைத்துக்கொண்டு நிலா சிவபெருமானின் தலையில் தஞ்சமடைந்தார். 

சாபத்தின் பிடியில் சிக்கிய சந்திரனுக்கு சிவபெருமான் அடைக்கலம் கொடுத்தார். சிவபெருமான் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரனின் சாபம் நீங்கியது.


இதையடுத்து சந்திரனுக்கு, தனது தலையில் அடைக்கலம் கொடுத்தார் சிவபெருமான். அவர் தன் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரன் வளரத் தொடங்கினான். இப்படி தான் தேய்பிறை- வளர்பிறை உருவானது.


சிவபெருமான் பாதி ஒளி பொருந்திய நிலவை தலையில் அணிந்துகொண்ட பிறகு தன் சக்தி மூலம் அடுத்த 15 நாட்களுக்கு நிலவின் ஒளியை அதிகரிப்பதில் வெற்றிகண்டார். அடுத்த 15 நாட்களில் நிலா மீண்டும் தேயத்தொடங்கியது.


சிவபெருமான் மஹாகால் என்று அழைக்கப்படுகிறார். அதற்கு அர்த்தம் காலங்களை கடந்தவர் என்பதாகும். நிலா தேய்வதும், வளர்வதும் சிவபெருமானாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது, அதற்கு காரணம் சிவபெருமான்தான் நேரத்தை கட்டுப்படுத்துபவர் ஆவார். பலமுறை மக்களை காப்பாற்றிய சிவபெருமான் உயிரினங்களை காப்பாற்ற மேற்கொண்டும் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்.

 

சந்திரனை, சிவபெருமான் தனது திருமுடியில் அமர்த்தியது ஒரு சோமவார தினத்தில் தான். ‘14 ஆண்டுகள் தொடர்ச்சியாக சோமவாரம் பூஜை செய்யும் கணவன்- மனைவிக்கு முக்தி கிடைக்க வழி செய்ய வேண்டும்’ என்று சந்திரன், ஈசனை வேண்டிக்கொண்டான்.

அவனது விருப்பத்தை சிவபெருமான் நிறைவேற்றினார். ஆம்.. நாம் தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் சோமவார விரதத்தைக் கடைப்பிடித்தால், இறைவனின் திருப்பாதத்தை அடையலாம்.தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


அன்பே சிவம் - சிவமே அன்பு   திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும். 


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்