திமுகவில் இணைந்த அமைச்சர் செங்கோட்டையன் அண்ணன் மகன்

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் திமுகவில் இணைந்துள்ளார்.


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.


தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.


இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் திமுகவில் இணைந்துள்ளார்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு வடக்கு மாவட்டத்தை சேர்ந்த  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகன் குள்ளம்பாளையம்  கே.கே.செல்வன் மற்றும் கோபி கே.ஈ.கதிர்பிரகாஷ், கோபி ஆர்.துரைசாமி ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.