செய்திகள்


தூத்துக்குடி தட்டார்மடம் பகுதியில் நிலத்தகராறில் கடத்தி கொல்லப்பட்ட செல்வனின் தாயார் உயிரிழந்தார்.நிலத்தகராறு காரணமாக கடந்த 17 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் என்ற இளைஞர் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த கொலை வழக்கில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் திருமண வேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் கொலை செய்யப்பட்ட செல்வத்தின் தாய் உடல்நலக்குறைவால் காலமானார். செல்வன் இறந்ததிலிருந்து உடல்நிலை மோசமாகி சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


_______________________


திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆர்.எஸ்.பாரதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.