அரசுப் பள்ளி மாணவருக்கும் முட்டைகள் வழங்க அரசாணை வெளியீடு


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் சத்துணவு பொருட்களுடன், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 முட்டைகள் வழங்க தமிழக ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்துப் பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.


இதனால் பள்ளிகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எவ்வித முடிவும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இதனால் பல தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு கல்வியை புகட்ட ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வந்தனர்.


சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் பொருள்களான அரிசி, பருப்பு போன்றவை அந்தந்தப் பள்ளிகளிலேயே நேரடியாக விநியோகிக்க உத்தரவிடப்பட்டது.


இதனையடுத்து அண்மையில் அனைத்து மாணவர்களும், அவர்களது பள்ளிகளில் உலர்ப்பொருட்களை வாங்கி சென்றனர்


அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு முட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.செப்டம்பர் 1 முதல் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 முட்டைகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பள்ளிகள் திறக்கப்படும் வரை முட்டைகளை வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது


தொடர்ந்து, இலவச பாட புத்தகங்கள் வழங்கும்போதே முட்டைகளும் சேர்த்து வழங்க ஆணையிடப்பட்டிருக்கிறது.