பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் தமிழகத்தில் வெளியீடு


பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் தமிழகத்தில் 28.09.2020 வெளியீடப்படுகிறது.


தமிழகம் முழுவதிலும் இன்று பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 25 ஆம் தேதி இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.


அதற்கு பிறகு தற்பொழுது இன்று மாலை தரவரிசைப்பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில்கொரோனாவால் சான்றிதழ் பதிவு ஏற்றம் செய்ய மாணவர்கள் கால அவகாசம் கேட்டு வந்ததால் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


தமிழகத்தில் 458 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் இருப்பதாகவும், 11.1  மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.