கிசான் நிதி திட்ட மோசடி


கிசான் நிதி திட்ட மோசடி : கடலூர் மாவட்டத்தில் போலி பயனாளிகள் வங்கி கணக்கில் இருந்து மேலும் ரூ.1.4 கோடி பறிமுதல்


* போலி பயனாளிகளிடம் இருந்து இதுவரை ரூ.5.6 கோடி பறிமுதல்


விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள விவசாய நடவடிக்கைகளைத் தொடர உதவும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜ்னா 2018 இல் நிறுவப்பட்டது.

 

இந்த திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு- குறு விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.6 ஆயிரம் நிதிஉதவி ஊக்கத்தொகையாக வழங்கும் திட்டத்தில், தற்போது 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் உதவும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

இதன்படி நான்கு மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நேரடியாக வரவு வைக்கிறது.


விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்ட மோசடியில் 11,200 போலி பயனாளிகளிடம் இருந்து ரூ.4.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, அரசின் கணக்கில் அந்த நிதி சேர்க்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 1,700 பேர், ரூ.68 லட்சம் வரை முறைகேடாக நிதி உதவி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.