தமிழகத்தில் அண்மையில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதில் முக்கியமானதாக மாவட்டங்களுக்கிடையே செல்ல இ-பாஸ் கட்டாயமில்லை என்பதை அறிவித்தார்.
மாநில அரசு அறிவித்தாலும், மாவட்ட நிர்வாகம் மாவட்ட நிலைமையை பொறுத்தே மாநில அரசு உத்தரவுகளை அமல்படுத்தும்.
தற்போது நீலகிரி மாவட்டத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும்போது இ-பாஸை சோதிக்க நீலகிரி மாவட்ட எல்லையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆனால், நீலகிரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.