திட்டையில் தனி சந்நிதியில் நவக்கிரக குரு

திட்டையில் வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில்  நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான்



இச்சிவாலயத்தின் மூலவர் வசிஷ்டேஸ்வரர், தாயார் உலகநாயகியம்மை.

 

சிவனின் தேவாரப்பாடல்கள் பாடப்பெற்ற 274 கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் நித்யாபிஷேகம் வேற எந்த கோவிலிலும் நடைபெறாத ஒன்று. இதை எங்கேயும் காணமுடியாது.

 

இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவதுவாக சுயம்பு லிங்கமாக காணப்படுகின்றார்.

 

முதல் பிரகாரமாக மூலவர் வசிஷ்டேஸ்வரர் கோவில் கிழக்கே நோக்கியபடி அமைந்துள்ளது. இராஜகோபுரம் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது.

 

இறைவன் வசிஷ்டேஸ்வரர் சிவலிங்க வடிவில் காணப்படுகின்றார். முன்னால் செப்பினாலான நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. கொடிமரம் கருங்கல்லால் செதுகபட்டுள்ளது. இறைவி தெற்கு நோக்கி நின்ற வடிவில் காணப்படுகின்றார்

 

கோவிலின் முன்னால் செப்பால் ஆன நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது.

 

அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

 

மூலஸ்தானத்தில் மேற்புறமிருந்து தண்ணீர் மூலவருக்கு மேல சரியாக சொட்டுகிறது. இது இந்த கோவில் கட்டியதிலிருந்து நிகழ்கிறதாம். அதிலும் சரியா 20 நிமிடங்களுக்கு ஒரு முறை என இத்தனை வருடங்களாக சொட்டிக்கொண்டிருப்பது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.


 


இந்த கோவிலில் ஒரு சிறப்பு இருக்கிறது. வருடத்தில் ஆறு நாட்கள் மட்டும் சூரியன் மூலவரின் மீது பட்டு சிறப்பு காட்டுகிறார். அதாவது ஆவணி மாதம் 15,16,17 ஆகிய நாட்களிலும், பங்குனி மாதம் 25,26,27 ஆகிய நாட்களிலும் இந்த சூரியன் தன் ஒளியை மூலவரின் மீது பாய்ச்சுகிறது.

 


இந்த கோவிலின் தல விருட்சம் முல்லை, வெண் செண்பகம், செவ்வந்தி ஆகும். தல விருட்சம் என்பது அந்தந்த பகுதியில் அதிகம் இருக்கும் மரங்களாகவே இருக்கும். அப்படி இந்த பகுதியில் அதிகம் வளர்ந்து நிற்கும் முல்லை, வெண் செண்பகம், செவ்வந்தி ஆகிய மரங்கள் தல விருட்சங்களாக இருக்கின்றன.


தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்

 

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவாலயமாகும்.

 


 




திட்டையில் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான், தனிச்சந்நிதியில் எழுந்தருளி காட்சி தருகிறார்.


தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம் என்றால் அது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது..

 




குரு பகவானுக்கு தமிழகத்தில் நிறைய கோவில்கள் இருந்தாலும், வசிஷ்டேஸ்வர் குருவை ராஜகுருவாக பார்க்கும் ஒரே தலம் இதுதான்.


குரு பகவானிற்கு தெற்கு நோக்கி தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது

 

ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். தீர்த்தம் இக்கோவிலின் முன்புறம் உள்ளது. சனி பகவானுக்கு பரிகாரம் செய்ய உகந்த கோவிலிலாகவும் இது விளங்குகின்றது.




வியாழக்கிழமைகளில், திட்டை குரு பகவானை வணங்குங்கள். குரு யோகமும் குருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்.



சிறிய ஊரான திட்டை திருத்தலத்தில், கோயிலும் எதிரே திருக்குளமும் என அழகுற அமைந்துள்ளது குரு பகவான் குடிகொண்டிருக்கும் ஆலயம்.


இங்கே சிவபெருமானின் திருநாமம் வசிஷ்டேஸ்வரர். வசிஷ்டர் முதலானவர்கள் தவமிருந்து வழிபட்ட புண்ணிய க்ஷேத்திரம்.


ஒருவருக்கு திருமணம் நடக்கவேண்டுமெனில் குருவின் பார்வை வேண்டும். குருவருள் வேண்டும். குருவருள் இருந்தால்தான் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். இதைத்தான் புராணமும் தெரிவிக்கிறது.


ஆனானப்பட்ட உமையவள், சிவனாரை மணம் புரிய வேண்டினாள். குரு பார்வை வேண்டும் என்பதை அறிந்தாள். திட்டை எனும் திருத்தலத்துக்கு வந்தாள்.


தேவ குருவான பிரகஸ்பதியை மனதார நினைத்து தவம் புரிந்தாள். இதன் பலனாக குருவின் பார்வை கிடைக்கப்பெற்றாள். சிவனாரைத் திருமணம் புரிந்தாள் என விவரிக்கிறது புராணம்.


திருமண தோஷம் இருக்கும் பெண்களுக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும். வயது தாமதித்துக்கொண்டே இருந்தால், இந்த கோவிலுக்கு சென்று வரலாம். விரைவில் திருமண யோகமும், குழந்தை யோகமும் கிடைக்கும். வியாழன் பார்வை இருந்தால் தொழில் முன்னேற்றம் காணலாம் என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள மங்களாம்பிகையை வழிபடுங்கள்.

திட்டை என்றால் மேடு என்று அர்த்தம். வாழ்வில் பள்ளத்தில் இருப்பவர்களை, கீழே இருப்பவர்களை மேலே உயர்த்தி அருளுவதற்காகவே இங்கே தனிச்சந்நிதி கொண்டிருக்கிறார் குரு பகவான்.

நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவான், தேவ குருவான பிரகஸ்பதி. சிவனாரின் அருள் பெற்று, நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக வீற்றிருக்கிறார்.


அந்த நவக்கிரக குரு பகவான், தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம்தான் திட்டை திருத்தலம்.


திட்டை குருபகவானை வியாழக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் வந்து தரிசியுங்கள். குருவின் பார்வை நம் மீது பட்டாலே போதும்... குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம்.


நல்ல படிப்பிருந்தும் வேலை இல்லை என்று வருந்துவோர், அதிக சம்பளம் இல்லையே என்று கலங்குவோர், உரிய வயது வந்தும் திருமணம் இன்னும் கைகூடவில்லையே என்று கண்ணீர் விடுபவர்கள், தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலத்துக்கு வந்து, தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் குரு பகவானை வணங்கி வழிபடுங்கள். தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.


குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குருவின் பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.


இதுவரை இருந்த குழப்ப நிலையெல்லாம் மாறும். மனதில் தைரியமும் புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் தந்தருள்வார் குரு பகவான்.


தஞ்சாவூரில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது திட்டை. தென்குடித்திட்டை என்று போற்றப்படுகிறது


இந்த கோவிலில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

அருகில் மெலட்டூர், இந்தப் பக்கம் திருக்கருகாவூர் என்று தலங்கள் இருக்கின்றன.

 


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.



 



தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்






அன்பே சிவம் - சிவமே அன்பு   திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்