செய்திகள்

 உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.02 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,02,137 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 33,297,503 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 24,629,847 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,371 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.செயற்குழுவில் பங்கேற்க 284 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.284 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சமூக வலைத்தளத்தில் முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவதூறு பரப்பியதாக கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயனை பாவூர்சத்திரம் போலீஸ் கைது செய்தது.சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 7வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 84.14 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் நேற்றைய விலையிலிருந்து 9 பைசா விலை குறைந்து, 76.18 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.