முழு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் ஞாயிறான இன்று தமிழகம் முழுக்க மக்கள் கூட்டம். முக்கியமாக இன்று சென்னையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஞாயிறு லாக்டவுன் ரத்து என்பதால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மக்கள் பெரும் கூட்டமாக குவிந்தனர்.
உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த அனுமதி - தமிழக அரசு. காலை 6 முதல் இரவு 8 மணி வரை உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த அனுமதி. திரையரங்குகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய முடிவு. ஆலோசனை கூட்டத்திற்கு தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கும் அழைப்பு.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்வு. 965 பேர் இன்று சென்னையில் கொரோனா காரணமாக பாதிப்பு. இன்று 79840 பேருக்கு இன்று கொரோனா சோதனை செய்துள்ளது
______________________________
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடம்
மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 20,800 பேருக்கு கொரோனா. ஆந்திரா 10,825; கர்நாடகா 9,746; உபி. 6590; தமிழகம் 5,870 பேருக்கு கொரோனா பாதிப்பு.
உலக நாடுகளிலேயே முதல் முறையாக இந்தியாவில் ஒரே நாளில் 90,600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 73,161. இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 31,77, 673. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிகை 8,61, 866. இந்தியாவில் ஒரேநாளில் 1044 பேர் கொரோனாவுக்கு மரணம்- மொத்த உயிரிழப்பு 70,679.