குறுஞ் செய்திகள் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு:


கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்களுக்கான, மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டல் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்றும், இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என்றும் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


____________________________


இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும்:


தமிழகத்தில் புதியதாக தொடங்கப்படவுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளிலும், இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


___________________________


பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:


இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வுக்கூடங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


__________________________


புதுவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகின்ற 14ஆம் தேதி வரை 11 தெருக்களில் உள்;ர் முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் அறிவித்துள்ளார்