மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை


தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.


தற்போது  செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில்  29.09.2020  காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.


கொரோனா பாதிப்பு நிலவரம், மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மீண்டும் நீட்டிக்கப்படுமா ? என்பது ஆலோசனைக்கு பின்னர் தான் தெரியும்.


ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன்  முதலமைச்சர் ஆலோசிக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.