IPL2020 28/09/2020


சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி


பெங்களூரு அணிக்கு எதிரான 29.09.2020  போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக படிக்கல், பின்ச் இருவரும் களமிறங்கினர்.


பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில்  3 விக்கெட்டை இழந்து 201 ரன்கள்  எடுத்தனர்.


பின்னர், இறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, குயின்டன் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் ரோஹித் 8 ரன்னில் வெளியேற , பின்னர் சூர்யகுமார் யாதவ் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழக்க இவரை தொடர்ந்து குயின்டன் 14 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


அணி மோசமான நிலையில் இருக்க மத்தியில் இறங்கிய இஷான் கிஷன்,  பொல்லார்ட் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 99 ரன்கள் குவித்தார். பொல்லார்ட் 60 ரன்கள்  எடுத்தார்.


இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5விக்கெட்டை இழந்து 201 ரன்கள்  எடுத்தனர்.


இதனால், போட்டி சமனில் முடிந்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.


சூப்பர் ஒவரில் முதலில் இறங்கிய மும்பை அணி 1 விக்கெட்டை இழந்து 7 ரன்கள் எடுத்தனர்.


பின்னர், இறங்கிய பெங்களூரு அணி 11 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.