IPL2020

 



 


சென்னை அணி தோல்வி


சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், இரண்டு வார கால தனிமைப்படுத்தலில் இருந்ததால் எவ்வித பயனும் கிடைக்கவில்லை என்று, அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் 4வது லீக் போட்டி ஷார்ஜாவில்  சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.


20 ஓவர்களில் சென்னை அணியால் 6 விக்கெட்டுக்கு 200 ரன்களே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.


இதுகுறித்து, கேப்டன் தோனி கூறுகையில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், இரண்டு வார கால தனிமைப்படுத்துதலில் இருந்ததால், அணிக்கு தேவையான பயிற்சி வாய்ப்பு கிடைக்கவில்லை


ஐ.பி.எல்2020  கிரிக்கெட்டி போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி ஆடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7வது வரிசையில் பேட்டிங் செய்தது பெரும் விவாதத்திற்குள்ளாகி விவகாரமாகி உள்ளது.


இது குறித்து முன்னாள் நட்சத்திரம் கவுதம் கம்பீர் கூறுகையில், ‘அனுபவம் இல்லாத ருதுராஜ், சாம் கரனை நடு வரிசையில் இறக்கிவிட்டு, தோனி 7வது இடத்தில் பேட் செய்ய வந்தது உண்மையில் எனக்கு சர்ப்ரைசாக இருந்தது.


அதில் அர்த்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கேப்டனாக முன்னின்று போராடி இருக்க வேண்டும். சென்னை அணியில் டு பிளெஸ்ஸி மட்டுமே தனித்து போராடினார்’ என்று சாடியுள்ளார்.ன்.



மும்பை அணி வெற்றி ..!


ஐபிஎல் டி20 தொடரின் 5-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது


கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்து 49 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.