GREGOR சூரிய தொலைநோக்கி!


சூரியனின் காந்தபுலத்தை துல்லியமாக படம்பிடித்த GREGOR சூரிய தொலைநோக்கி.


சூரியனின் காந்தபுலத்தை துல்லியமாக படம்பிடித்திருக்கிறது உலகின் மிகப்பெரிய சூரிய தொலைநோக்கி கிரிகோர்


ஸ்பெயின் நாட்டில் ஜெர்மன் கூட்டமைப்பால் இயக்கப்படும் டெய்டு ஆய்வகத்தில் அமைந்துள்ளது ஐரோப்பாவின் மிகப்பெரிய சூரிய தொலைநோக்கி கிரிகோர் (GREGOR).


சூரியனின் மிக நேர்த்தியான மற்றும் துல்லியமான உள்அமைப்பை இந்த தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. குறிப்பாக சூரியனின் காந்தபுலத்தை மிகத் துல்லியமாக படம்பிடித்துள்ளது.


லீப்னிஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் சோலார் பிசிக்ஸை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் கொண்ட குழுவால் இந்த தொலைநோக்கியின் லென்ஸில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பாவிலிருந்து முன்பைவிட மிகத் துல்லியமாக, தெளிவாக சூரியனைக் காணமுடியும்.


மறுவடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கிமூலம் சூரியனில் 50கிமீ தொலைவில் உள்ள தெளிவான விவரங்களை விஞ்ஞானிகளால் காணமுடியும். கூர்மையான ஊசியை ஒரு கால்பந்தின்மீது வைத்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்து பார்ப்பதைப் போன்று தெரியும்.