பிரபல டிவி தொடர் நாயகி தற்கொலை


பிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகையான ஸ்ராவணி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழ், மற்றும் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ராவணி கடந்த எட்டு ஆண்டுகளாக தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.மனசு மமதா, மவுனராகம் உள்ளிட்ட பல தெலுங்கு சின்னத்திரை தொடர்களில் நடித்திருப்பவர் ஷ்ராவனி. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டில், தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார்.


ஷ்ரவானி டிக் டாக்கில் ஒருவருடன் பழகி நட்பாகினார். அவர், ஷ்ராவனியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார் என்று ஷ்ராவனியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.


காக்கிநாடாவைச் சேர்ந்த சன்னி என்கிற தேவராஜ் ரெட்டியுடன் டிக் டாக் மூலமாகப் பழகி ஷ்ராவனி நட்பானார்.


பின் இருவரும் நேரில் சந்தித்து நெருக்கமாகியுள்ளனர். சன்னி என்கிற தேவராஜ் ரெட்டி, தனக்கு பெற்றோர் இல்லை என்று கூறி ஷ்ராவனியின் அனுதாபத்தைப் பெற்றிருக்கிறார்.
சன்னி என்கிற தேவராஜ் ரெட்டி  என்பவரின் துன்புறுத்தல் காரணமாக ஸ்ராவணி தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


சன்னி என்கிற தேவராஜ் ரெட்டி  துன்புறுத்தலால் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படும் ஸ்ராவணி வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டாரா என்ற அடிப்படையில் காவல்துறை விசாரித்து வருகிறது. என்றாலும் ஸ்ராவணியின் குடும்ப உறுப்பினர்கள் தேவ்ராஜ் ரெட்டி மீது எப்சர்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.