அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.


தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,39,959 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடங்கவுள்ளதால் அது குறித்தும் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.


கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் வருகின்ற 4-ம் தேதி அன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.