ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.
______________________
மங்கல இசை கலைஞர்களுக்கு தனி வாரியம் அமைப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும்
________________________
பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் கள் குடிப்பது புற்றுநோய் உள்ளிட்ட 15 வகையான நோய்களை குணப்படுத்தும் என தெலங்கானா அமைச்சர் தெரிவித்துள்ளார்
____________________
இந்திய எல்லையான லடாக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் நோவல், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவ படைகள் முறியடித்த நிலையில், மீண்டும் பதற்றம் நிலவுவதால் ஆலோசனை நடைபெற்று வருகிறது.