மாதத் தவணையில் பி.எம்.டபள்யூ (BMW) பைக்


 


இளைஞர்களின் பெரும் விருப்பமாக பைக் உள்ளது. அதிலும் ஹார்ட்லி டேவிட்சன், பிஎம்டபள்யூ, கேடிஎம், ராயல் என்ஃபீல்ட் போன்ற பைக்குகள் அவர்களுடைய விருப்பம்.

ஆனால் இவற்றின் விலைதான் அதிகம் என்பதாலும் தாவணைத்தொகை அதிகம் என்பதாக பலரும் கூறி வந்த நிலையில், பிஎம்டபள்யூ நிறுவனம் 2020 ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்ல் மோட்டார் சைக்கிளை எளிய மாதத்தவணையில் வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த பைக் மாடல்களின் விலையும் குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்கள் இந்த மோட்டார் சைக்கிளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.