சேவை செய்வதே பிரதமர் பிறந்தநாளைக் கொண்டாட சிறந்த வழி!"- ஜே.பி.நட்டா


பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான சிறந்த வழி, ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு சேவை செய்வதே என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்த நாள், இன்று கொண்டாடப்படுகிறது.அவருக்கு அதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், டெல்லியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு "சேவா சப்தா" நிகழ்ச்சி நடைபெற்றது.


அதில் கலந்துகொண்டு பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான சிறந்த வழி, ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு சேவை செய்வதே என தெரிவித்தார்.


மேலும், அரசியல் மற்றும் தேர்தல்களை எதிர்த்துப் போராடுவது தான் அரசியல் கட்சிகளின் வேலை என கூறிய அவர், இன்று நாம் செய்வது அரசியல் மட்டுமல்லாமல், மக்களுக்கான சேவைகளையும் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


அதுமட்டுமின்றி, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச மின்சாரம் வழங்க பிரதமர் மோடி உறுதியளித்துள்ளாகவும் அவர் கூறியுள்ளார்.