7 ஆண்டுகளில் இந்தியா வெற்றி


அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி பெற்றார்.

 

கிராண்ட்ஸ்லாம் என்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக மைதானத்தில் பார்வையாளர்கள் இன்றி இன்றி இந்த போட்டி நடைபெறுகிறது.

 

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் , அமெரிக்கா வீரரான பிராட்லி கிளான் உடன் மோதினார்.

 

இப்போட்டியில் 6-1, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் சுமித் நாகல் வெற்றி பெற்றார். இதன் மூலம் கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

 

இதற்கு முன் கடந்த 2013 -ம் ஆண்டு இந்தியாவின் சோம்தேவ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.